அடுத்த பீரங்கி.. பாஜகவில் இணையும் வடிவேல் ?

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் எவ்வித வெறுப்பும் இல்லாமல் பிடிக்கும் ஒரே நடிகராக இருப்பவர் வடிவேலு. இவரை மையமாக வைத்துதான் தற்போது பெரும்பாலான மீம்ஸ்கள் உலா வருகின்றனர். அந்த அளவிற்கு தவிர்க்க முடியாத நகைக்சுவை ஆளுமை நடிகர் வடிவேல்.
திமுகவிற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் நடிகர் வடிவேலு, அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்படை குறைத்துக்கொண்டார். எனினும் ஒருசில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், வடிவேலு தற்போது பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாஜகவில் ஏராளமான தமிழக நடிகர், நடிகைகள் இணைந்துள்ளன. கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கெளதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த வரிசையில் தற்போது நடிகர் வடிவேலுவும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் உலாவிக்கொண்டிருக்கிறது. எனினும் இது தொடர்பாக வடிவேலு தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் எழுச்சிபெற நினைக்கும் பாஜக அதற்கு தற்போதே தயாராகி வருகிறது. இதனால் திரைபிரபலங்களை தங்களை கட்சியில் அடுத்தடுத்து இணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
அதனொரு கட்டமாக தற்போது வடிவேல் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே குஷ்பு பாஜகவில் இணைந்தப்போது, அவரது வெளிநாட்டு முதலீடு தொடர்பான ஆவணங்கள் மூலம் மிரட்டப்பட்டு பாஜகவில் இணையவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
newstm.in