1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த அதிரடி..! சிமெண்ட் வணிகத்தில் நுழையும் அதானி குழுமம்..!

1

சிமெண்ட் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அதானி குழுமம் பல சிமெண்ட் நிறுவனங்களை அடுத்தடுத்து கையகப்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளது. இந்த நிறுவன கைப்பற்றுவதன் மூலம் அதானி குழுமம், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உருவெடுக்க இலக்கு வைத்துள்ளது. இதற்காக, 3 பில்லியன் டாலர் அதாவது கிட்டத்தட்ட ரூ.24,500 கோடி மதிப்பிலான நிதியை ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.


தற்போது வெளியாகியுள்ள தகவல் படி அதானி குழுமம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பென்னா சிமெண்ட், குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட சௌராஷ்ட்ரா சிமெண்ட், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸின் சிமெண்ட் பிரிவு, மற்றும் ABG ஷிப்யார்ட் நிறுவனத்தின் வஜ்ராஜ் சிமெண்ட் ஆகியவற்றை கைப்பற்றும் லிஸ்டில் வைத்துள்ளது.இதில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் வஜ்ராஜ் சிமெண்ட் நிறுவனங்கள் தற்போது கடன் சுமை பிரச்சனையில் சிக்கியுள்ளது.

மேலும் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட்ஸ் பங்குகளை வாங்குவதன் மூலம் சிமெண்ட் வணிகத்தில் நுழைந்த அதானி குழுமம், பென்னா சிமெண்ட் நிறுவனத்தை 10ஆயிரத்து 422 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்தின் சிமெண்ட் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 14 மில்லியன் டன்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
 

Trending News

Latest News

You May Like