கண்ணீர் வரவழைக்கும் செய்தி ..! பெங்களூரு சாலையில் கால் வைத்ததும் கையில் குழந்தையுடன் தமிழக பெண் பலி..!

சென்னையில் இருந்து இன்று அதிகாலை பேருந்து மூலம் பெங்களூரு வந்துள்ளார் சென்னையைச் சேர்ந்த சவுந்தர்யா.
இவருக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 மாதத்தில் ஒரு கை குழந்தை இருந்துள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு சென்ற சவுந்தர்யா இன்று அதிகாலை பெங்களூரு வந்துள்ளார்.கை குழந்தையுடன் சாலையில் கடக்க வந்துள்ளார். கணவர் சந்தோஷ் பின்னாடியே உடைமைகளுடன் வந்துள்ளார்.அந்த வேலையில் சாலையோரம் உயிர் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளதை பார்க்காமல் சவுந்தர்யா அதனை மிதித்துளார். அவர் மீது மின்சாரம் பாயந்ததில் சம்பவ இடத்திலேயே தாய் மற்றும் 9 மாத மகள் உயிரிழந்துள்ளனர். இவர்களை காப்பாற்ற சென்ற கணவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கணவர் கண் முன்பே மனைவியும், குழந்தையும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Disturbing Visuals 🚨
— Divya Gandotra Tandon (@divya_gandotra) November 19, 2023
A woman and her baby were burned alive after coming in contact with a live wire lying on the roadside in Bengaluru. The incident occurred at 5 am today, and a case has been filed in this regard.@BlrCityPolice
pic.twitter.com/DDPXj0vcdT