பகீர் செய்தி..! அதிகரிக்கும் மாரடைப்புக்கு கொரானா தான் காரணம் : மத்திய சுகாதார அமைச்சர்..!
யாராவது மாரடைப்பால் உயிரிழந்தால் அவரது இறப்புடன் கோவிட் தடுப்பூசியும் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது.கோவிட் தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின், குறிப்பாக இளம் வயதில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகிறது.
சமீபத்தில் குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது 10 பேர் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இது குறித்து நேற்று பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, " இதற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக தங்கள் உடலை வருத்தி வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
"கடுமையான கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் மாரடைப்புக்கு ஆளாகாமல் இருக்க, 1 முதல் 2 ஆண்டுகள் வரை கடுமையான உடற்பயிற்சி அல்லது தீவிர வேலைகளில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) ஒரு விரிவான ஆய்வை நடத்தியது என்றும் அந்த ஆய்வின் முடிவில் இந்த தகவல் வெளியாகி உள்ளது என்றும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.