திருமணமாகி 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில் புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை..!
கடந்த புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி கழுகுமலையில் இருந்த செல்வியை, தந்தை பாடித்துரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, தான் நலமாக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் அன்றைய தினமே மாலையில் வீட்டின் மாடியிலுள்ள அறையில் செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மகளின் மாமியார் தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலைக் கேட்டு பதறியடித்தப்படி செல்வியின் பெற்றோர் சென்றனர். சடலமாக கிடந்த தங்கள் மகளைக் கண்டு அழுது கதறினர். இந்நிலையில், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பாண்டித்துரை அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு மாதம் கூட முழுசாக முடியாத நிலையில், செல்வி தற்கொலை செய்துகொண்டதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.