புதுமணப் பெண் தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் ஆடியோ..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27). இவருக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன் என்பவர் மூத்த மகன் வழி பேரன் கவின்குமார் என்பவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணமாகிய நாளிலிருந்து கவின்குமார் அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோர் தொடர்ந்த ரிதன்யாவை சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு தன்னுடைய காரில் ஒண்டிப்பாளையம் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது வழியில் சாலையோரம் காரை நிறுத்தி தன்னுடைய தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார். அதில் தொடர்ந்து கவின்குமாரும் அவருடைய பெற்றோரும் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். கொடுமை படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தன்னை திருமணம் செய்துள்ளார்கள். தொடர்ந்து அவரோடு வாழ விருப்பமில்லை.
அந்த அளவிற்கு தைரியமான பெண் நான் இல்லை. வேறு ஒருவரோடு வாழ்க்கை தொடங்கவும் எனக்கு விருப்பமில்லை. என்னுடைய வாழ்க்கை முடித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் கணவர் வீட்டில் தன்னுடைய நகை வைக்கப்பட்டு இருக்கும் பெட்டியின் சாவியையும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தான் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்து குடித்து உயிரிழந்துள்ளார். உடனடியாக அந்த பகுதிக்கு வந்த காவல் துறையினர் ரிதன்யா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். என் சாவுக்கு கணவர் கவின், அவரது குடும்பத்தினரே காரணம்' என தனது மனக் குமுறல்களை ரிதன்யா வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆடியோ, வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.