1. Home
  2. தமிழ்நாடு

திருமணம் முடிந்ததும் நீட் போராட்டக் களத்துக்கு வந்த புதுமணத் தம்பதி..!!

udhayanidhi stalin
திருமணம் முடிந்த கையுடன் நீட் தேர்வுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட போராட்டத்தில் புதுமணத் தம்பதிகள் கலந்துகொண்டு தங்களுடைய ஆதரவை வழங்கினர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது திருமணம் முடிந்த கையுடன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மணக்கோலத்தில் புதுமணத் தம்பதிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like