ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்..! இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு..!

தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.22) மதியம் 02.00 மணிக்கு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 21வது போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங்கைத் தேர்வு விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 130 ரன்களையும், ரச்சின் 75 ரன்களையும், பிலிப்ஸ் 23 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், பும்ரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர், 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.