வந்தாச்சு புத்தாண்டு : இந்த 5 ராசிகளுக்கு திருமண யோகம் கைகூடும்..!
நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை என கவலையோடு இருக்கும் 12 ராசிக்காரர்களில் 5 ராசிகளுக்கு அடுத்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடக்கும். ஏனென்றால் அவர்களுக்கான திருமண யோகம் சிறப்பாக இருக்கிறது. ரிஷபம், விருச்சிகம், மகரம், சிம்மம், மீனம் ஆகிய 5 ராசிக்காரர்கள் தான் திருமண யோகம் உள்ள அதிர்ஷ்டக்கார ராசிகள். அந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம் : தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேடி நீண்ட நாட்களாக தனிமையில் வாழும் உங்களுக்கு, புத்தாண்டு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் தேடல் முடிந்து, நீங்கள் விரும்பிய துணையுடன் திருமணம் செய்து கொள்ளலாம். காதல் திருமணம் கைகூடும்
சிம்மம் : இந்த ராசிக்காரர்களுக்கு 2025-ம் ஆண்டு திருமண வாய்ப்புகள் அதிகம். தொலைதூர உறவினர்கள் திருமணத்துக்காக உங்கள் வீட்டு கதவை தட்டலாம். ஏற்கனவே காதல் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கு எல்லா கடினமான சூழலும் நன்றாக மாறி திருமணத்தில் முடியும். நேசித்தவர்களை திருமணம் செய்து கொள்ளும் காலம் எட்டிவிடும் தூரத்தில் உள்ளது.
விருச்சிகம் : 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும். சனி மற்றும் வியாழனின் ஆசீர்வாதத்துடன், ஜாதகத்தில் உள்ள சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறத் தொடங்கும். பல இடங்களில் நிராகரிக்கப்பட்டாலும், இறுதியாக உங்கள் திருமண விஷயம் நன்றாக முடிவடையும். உங்கள் திருமணம் நிச்சயம் பெற்றோருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்
மகரம் : புத்தாண்டு புதிய உறவுகளை கொடுக்கும் ஆண்டு. விரும்பியவர்களை கை பிடிப்பீர்கள். காதலை சொல்லாமல் இருப்பவர்களுக்கு சூழல்கள் நன்றாக அமைந்து காதலை தெரிவித்து, பாசிடிவ் பதில் கிடைக்கும். சிலருக்கு மட்டும் ஆரம்பத்தில் சில தயக்கமான பதில்கள் கிடைக்கலாம். ஆனால், முடிவு நன்றாகவே இருக்கும். வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தினர் ஆசி முழுமையாக கிடைக்கும்.
மீனம் : நீங்களும் விரும்பியவர்களை கரம் பிடிக்க முடியும். காதல் கை கூடும் நேரம் விரைவில். ஜாதக்கபடி திருமணம் செய்து கொள்ள விரும்புவர்களுக்கும் விரைவில் திருமணம் தொடர்பான நல்ல செய்தி வந்து சேரும். கடினமான காலம் வந்தாலும் விரைவில் அவை மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக மாறிவிடும். அதனால் திருமணம் மகிழ்ச்சி நிச்சயம் உங்களுக்கு உண்டு.