புத்தாண்டில் அரங்கேறிய கொடூரம்..! காதலனை அடித்து விரட்டி...
ராமநாதபுரம் அருகே வசிக்கும் இளம்பெண் ஒருவர் புத்தாண்டை ஒட்டித் தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என மிரட்டி உள்ளனர். மேலும், அவர்கள் மண்டைக்கேறிய மதுபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை:
மேலும் நீங்கள் இருவரும் தனிமையில் இருந்ததை நாங்கள் பார்த்து விட்டோம், அதனை வீடியோவாகவும் எடுத்து இருக்கிறோம் எனக் கூறியதோடு, அந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் காதலனை அடித்து விரட்டி விட்டு அந்தப் பெண்ணை நான்கு பேரும் செய்து சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
4 பேர் கைது:
இந்த நிலையில் தன்னை தாக்கிய நபர்கள்குறித்து அந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தான் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது இதனையடுத்து புவனேஷ் குமார், சரண், செல்வகுமார், முனீஸ் கண்ணன் ஆகிய நான்கு பேரைக் கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பலரிடம் அத்துமீறல்:
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவல் வெளியானது. இரவு நேரங்களில் அப்பகுதியில் சுற்றித் திரியும் நான்கு பேரும் தனியாக அல்லது ஆண்களுடன் வரும் பெண்களைக் குறி வைத்து மிரட்டி அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். மேலும் அவர்களது செல்போன்கள், நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்ததாகவும் கூறப்படுகிறது.
அதிரடி கைது:
சம்பவம் நடந்த அன்று அந்த இளம் பெண் தனது உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்து அவர்கள் நீங்கள் தனிமையில் இருந்ததை பார்த்து விட்டோம் எனக் கூறி மிரட்டி இருக்கின்றனர். மேலும் அவரது உறவினரை அடித்து விரட்டி விட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரியின் அடிப்படையில் நான்கு பேரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
எதிர்க் கட்சிகள் புகார்:
ஏற்கனவே சென்னை பல்கலைக்கழக பாலியல் பலாத்கார விவகாரம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா விவகாரம் எனத் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தீவிரமாகும் போராட்டம்:
குறிப்பாக ராமேஸ்வரத்தில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடந்திருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் நிலையில் தற்போது புத்தாண்டில் ராமேஸ்வரம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து சென்னை சம்பவத்தைப் போலவே ராமேஸ்வரம் சம்பவம் தொடர்பாகவும் போராட்டத்தை முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.