1. Home
  2. தமிழ்நாடு

நாளை இரவு புத்தாண்டு கொண்டாட்டம்: புதிய கட்டுப்பாடுகள் அமல் எதற்கெல்லாம் தடை..?

1

புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை தடுத்து கண்காணிக்க, கண்காணிப்பு சோதனைக் குழுக்களை அமைத்து, விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட காவல் துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், இருசக்கர வாகன வேக பந்தயத்தில் ஈடுபடுவர்களையும் தடுத்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைத்து விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல் துறை பணி சிறப்பாக செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என தனியார் நட்சத்திர ஓட்டல் பொது மேலாளர்கள் அழைத்து காவல் துறை ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.  

டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்க கூடாது. ரிசார்ட்டுகளில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல், அறைகளைவிட்டு வெளியே வர கூடாது என்றும் கூறியுள்ளது.

மேலும் ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் கண்டிப்பாக இயங்க வேண்டும் மற்றும் அடையாள அட்டை வழங்காத நபர்களுக்கு அறைகள் கொடுக்க கூடாது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளது.

இப்படியாக இந்த புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட சென்னை காவல் துறையினர் பணியாற்ற வேண்டும் என பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like