1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய வகையான வைரஸ் பரவுகிறதா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

தமிழகத்தில் புதிய வகையான வைரஸ் பரவுகிறதா? மருத்துவர்கள் சொல்வதென்ன?


கொரோனா வைரஸ் மாற்றம் அடைந்து கிளேட் ஏ3ஐ என்ற வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் ஏ1, ஏ2, ஏ3 உள்ளிட்ட வகைகளை சேர்ந்தது. அதில், ஏ2ஏ என்ற என்ற கொரோனா வைரஸ் தான் வீரியம் மிக்கது. தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த வைரஸ் மாற்றம் அடைந்து கிளேட் ஏ3ஐ என்று மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனை வைரஸ் என்பது ஆர்என்ஏ வகையை சேர்ந்தது என்பதால், மாற்றம் அடைவது அதன் இயல்பு. ஆனால் இதுகுறித்து கூடுதலாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அப்போது தான் உறுதிப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 


மேலும் புதிதாக இனம் காணப்பட்டுள்ள கிளையின வைரஸ் கூடுதலாக பாதிப்பு ஏற்படுத்தும் என்றோ அல்லது குறைவாக தாக்கம் செலுத்தும் என்றோ கூற எந்த ஆதாரமும் இல்லை என்று சிஎஸ்ஐஆர் தெளிவுபடுத்தி உள்ளது. 

newstm.in

Trending News

Latest News

You May Like