1. Home
  2. தமிழ்நாடு

புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்..! நாளை முதல் வாகனங்களுக்கு இ-பாஸ்..!

Q

மலை பிரதேச சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை கட்டுப்படுத்த இ- பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.
கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து நாளை (ஏப்.1) முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நீலகிரியில் வார நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்கள், இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பை நீலகிரி மாவட்ட கலெக்டர் தமது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேபோல் கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4000 வாகனங்கள், இறுதி நாட்களில் 6000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
மருத்துவ சேவை, அரசு பஸ்கள், உள்ளூர் பதிவெண் கொண்ட மற்றும் சரக்கு வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like