1. Home
  2. தமிழ்நாடு

10 மடங்கு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா ‘ஓமிக்ரான்’..!!

10 மடங்கு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா ‘ஓமிக்ரான்’..!!


தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு எனக் கூறியுள்ளது. மேலும், வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த வைரசை ‘கவலைக்குரிய வைரஸ் வகை’ என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர்.இந்த ஒமைக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like