கிண்டி அரசு மருத்துவனை கத்திக்குத்து சம்பவத்தில் புதிய திருப்பம்..!
சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு அரசு மருத்துவனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது தாய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் தாக்கியதாக கைதான விக்னேஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இந்த சூழலில், கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் மீது கத்தியால் குத்திய விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாய் பிரேமா மற்றும் சகோதரர் லோகேஷ் அவதூறு பரப்புவதாக தனியார் டாக்டர் மோசஸ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நான் கூறியதாக தவறான கருத்து. என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுரையீரல் பிரச்னைக்கு 3 முறை தன்னிடம் பிரேமா சிகிச்சை எடுத்தார்' என புகார் மனுவில் ஜேக்கலின் மோசஸ் குறிப்பிட்டுள்ளார்.