1. Home
  2. தமிழ்நாடு

பணம் பறிக்க புது டிரிக்..! உங்க வாட்ஸ்அப்-ல திருமண அழைப்பிதழ் வந்தா உஷார்..!

1

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி, போலி இணையதள மோசடி, பார்சல் வந்திருப்பதாக கூறி மோசடி என பல்வேறு வகையான யுக்திகளை பின்பற்றி அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அந்த வகையில் புதிதாக இன்னொரு ட்ரிக்கையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆம்.. திருமண அழைப்பிதழ்கள் போலவே காட்சியளிக்கும் பைலை அனுப்புகின்றனர். இது உண்மையில் அழைப்பிதழ் கிடையாது. அழைப்பிதழ் போலவே இருக்கும் தீங்கிழைக்கும் APK பைல்லாகும்.

சைபர் நிபுணர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இதுபோன்ற செய்திகள் தெரியாத நம்பரில் இருந்து வருவதாகவும், அப்பாவி மக்கள் திருமண அழைப்பிதழ் என்று நினைத்து ஆபத்தான சாஃப்ட்வேரை தங்கள் மொபைலில் தங்களுக்கே தெரியாமல் பதிவிறக்கம் செய்துவிடுவதாகவும் எச்சரிக்கின்றனர்.

 

டவுன்லோட் செய்யப்பட்ட ஃபைல் மூலம் சைபர் கிரிமினல்கள் பிறரின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், முக்கியமான டேட்டாவை எடுப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். எனவே திருமண அழைப்பிதழ் போல தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் மொபைலில் எதையும் டவுன்லோட் செய்வதற்கு முன்பு அனுப்புனரையும், வந்திருக்கும் ஃபைலையும் சரி பார்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஹிமாச்சல் பிரதேசின் சிஐடி மற்றும் சைபர் கிரைம் துறையைச் சேர்ந்த மோஹித் சாவ்லா எச்சரித்துள்ளார்.

 

திருமண அழைப்பிதழ் மோசடி எப்படி நடக்கிறது?: போலியான அழைப்புகளை மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்புகின்றனர். இன்றைய வேகமான உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதனால் உண்மையிலேயே பத்திரிக்கை தான் வந்துள்ளது என்று நினைத்து தீங்கிழைக்கும் ஏபிகே ஃபைலை அறியாத மக்கள் டவுன்லோட் செய்து விடுகின்றனர். இப்படி டவுன்லோட் செய்யப்படும் பைல் பிறகு சாதனங்களில் இருக்கும் டேட்டாவை நேரடியாக கட்டுப்படுத்தும் வாய்ப்பை மோசடிக்காரர்களுக்கு வழங்குகிறது.

மேலும் இதுபோன்ற தீங்கிழைக்கும் லிங்க் உங்களுக்கு அனுப்பப்பட்டால் நீங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு செல்லலாம் அல்லது cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலில் புகார் அளிக்கலாம்.

Trending News

Latest News

You May Like