1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய வழிமுறை..!

1

ஐஆர்சிடிசி  கணக்குடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்காத பயணிகள், உடனடியாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் தங்கள் ஆதார் தகவல்களை பதிவேற்றுமாறு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், இந்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. இனி, ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் ஆதார் சரிபார்ப்பு செய்தவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

அதுமட்டுமின்றி, ரயில்வே கவுன்டர்களில் நேரடியாக சென்று தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். ஜூலை 15 முதல், அவர்களுக்கு ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு  கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் பொருள், ரயிலில் பயணம் செய்பவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணைப் உள்ளிட்ட பின்னரே, கவுன்டர்களில் அல்லது முகவர்கள் மூலம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.

Trending News

Latest News

You May Like