1. Home
  2. தமிழ்நாடு

புதிய விதிமுறையான "Stop Clock "அறிமுகம் : இனி 61 நொடிக்கு 5 ரன்கள் பெனால்டி..!

1

சர்வதேச ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையே பந்துவீச்சு அணி எடுத்துக்கொள்ளும் நேரத்தை கட்டுப்படுத்த புதிய விதியை (ஸ்டாப் கிளாக்) ஐ.சி.சி.கட்டாயமாக்கி உள்ளது. இந்த விதியை ஏற்கனவே சோதனை அடிப்படையில் ஐ.சி.சி. அமல்படுத்தி இருந்தது.

புதிய விதிமுறைப்படி ஒரு ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும். 60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் எலக்ட்ரானிக் கடிகாரம் ஸ்கீரினில் காட்டப்படும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறை மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த விதி நடப்பாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் அமலுக்கு வர உள்ளது. அதன்பின் நடைபெற உள்ள அனைத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்த விதி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like