கோயம்பேடு பணிமனையில் புதிய அதி நவீன காற்றழுத்தவியல் ஆய்வகம்..!
கோயம்பேடு பணிமனையில் அதிநவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரயில் கோயம்பேடு பணிமனையில், மெட்ரோ ரயில் பராமரிப்பு பிரிவில், மெட்ரோ ரயில் பராமரிப்பு செயல்திறனை மேம்படுத்தும் பொருட்டு, அதிநவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் மற்றும் கருவி தொகுப்புகளின் கிடங்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக்கால் திறந்து வைக்கப்பட்டது.
கட்டம் 1 வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் காற்றழுத்தங்களை ஆய்வு செய்து, சரிபார்த்து, சோதனை செய்து, பழுதுபார்த்து சரிசெய்யும் வசதிகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன. இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பராமரிப்பை மேம்படுத்தி, செலவுகளைக் குறைத்து, புதுமையை வளர்ப்பதை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.