மத்திய அரசின் புதிய திட்டம் : யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் தெரியுமா ?

Unified Pension Scheme என்பது தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மற்றும் NPS ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களின் நன்மைகளை இணைக்கும் ஒரு ஹைப்ரிட் திட்டமாகும். NPS திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த யூபிஎஸ் திட்டத்திற்கு மாற்ற வாய்ப்பு அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஒருவர் மாறுவதற்கு முன்பு இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் தகுதி ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
உத்தரவாத ஓய்வூதியம்: குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சேவை முடித்த ஊழியர்கள் ஓய்வு பெறும் போது மாதம் ரூ.10,000 என்ற குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம் பெற தகுதி அடைவார்கள்.
தகுதி அளவுகோல்: இந்த திட்டம் பல்வேறு ஓய்வு காலநிலைகளை உள்ளடக்கியதாக உள்ளது. அதாவது ஒருவர் ஒய்வு பெறும் காலம், பணி காலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒய்வூதிய தொகை மாறுப்படும்.குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சேவை முடித்த பின்னர் ஓய்வு பெறும் ஊழியர்கள். FR 56(j) விதியின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவை முடித்த பின்னர் தானாக முன்வந்து ஓய்வு பெறும் நபர்கள்.
25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை காலம் கொண்ட ஊழியர்களுக்கு, அவர்களின் கடைசி 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% க்கு சமமான ஓய்வூதியம் பெறுவார்கள். 25 ஆண்டுகளுக்கு குறைவான சேவை காலம் கொண்டவர்கள், அவர்களின் சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் பெறுவார்கள்.
பணி நீக்கம் செய்யப்பட்ட, பணியிலிருந்து நீக்கப்பட்ட அல்லது தன்னார்வமாக பதவி விலகிய ஊழியர்களுக்கு UPS பொருந்தாது என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் மறைந்தால், கடைசியாக வழங்கப்பட்ட தொகையில் 60% குடும்ப ஓய்வூதியம் சட்டபூர்வமாக திருமணமான துணைவருக்கு வழங்கப்படும்.ஒன்றிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். NPS-ல் பதிவு செய்யப்பட்ட ஊழியர்கள் UPS-க்கு இடம்பெயர வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது.