இன்று முதல் அமலாகும் புதிய விதிகள்..!

இந்தியாவில் பல முக்கிய நிதி விதி மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது.
வருமான வரி விதிகளில், புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், சம்பளம் பெறும் நபர்கள் ரூ.75,000 நிலையான விலக்கால் வருடாந்திர வருமானம் ரூ.12.75 லட்சம் வரை வரிவிலக்கு பெறுவர் என கூறப்பட்டுள்ளது.
UPI விதிமுறைகளில், அதிக நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் மொபைல் எண்களிலிருந்து பண பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. நீண்ட காலம் பயன்படுத்தப்படாத எண்களுடன் இணைக்கப்பட்ட UPI கணக்குகளை வங்கிகள் மற்றும் கூகுள் பே, போன் - பே போன்ற தனியார் நிறுவனங்களே நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயனர்கள் தங்கள் UPI இணைக்கப்பட்ட எண்களை வங்கிகளுக்கு சென்று புதுப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு விதிகளில், வெகுமதி புள்ளிகள் மற்றும் சலுகைகளில் மாற்றங்கள் நடைபெறும். SBI SimplyCLICK மற்றும் Air India SBI Platinum பயனர்கள் மாற்றங்களை அனுபவிப்பார்கள். ஆக்சிஸ் வங்கி, விஸ்டாரா கிரெடிட் கார்டுகள் சில சலுகைகளை கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமாக (UPS) மாறுதல் பெறுகிறது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெற உள்ளனர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம், குறைந்தது 25 ஆண்டு சேவை செய்தவர்கள், அவர்கள் இறுதியில் வாங்கிய சம்பளத்தின் 50 சதவீதத்தை ஓய்வூதியதியமாக பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி விதிகளில், மல்டி-ஃபேக்டர் அங்கீகாரம் (MFA) கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 180 நாட்களுக்கு மேல் இல்லாத அடிப்படை ஆவணங்களுக்கு மட்டுமே மின்-வழி பில்கள் (EWB) உருவாகும் என கூறப்பட்டுள்ளது.
வங்கித் துறையில், SBI, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தேவைகளைப் புதுப்பிப்பார்கள். திருத்தப்பட்ட குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காத வாடிக்கையாளர்கள் அபராதங்களைச் சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.