1. Home
  2. தமிழ்நாடு

ஜூலை 1 முதல் கிரெடிட் கார்டில் புது ரூல்ஸ் வருது..!

1

அனைத்து கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்டுகளையும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) மூலம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது. இந்த நடவடிக்கை PhonePe, Cred, BillDesk போன்ற பெரிய ஃபிண்டெக் நிறுவனங்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஜூலை 1 முதல் அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களும் பிபிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பல முக்கிய வங்கிகள் கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கு பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் முறையைச் செயல்படுத்தவில்லை. ஒட்டுமொத்தமாக, இந்த வங்கிகள் 5 கோடிக்கும் அதிகமான கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளன. மேலும் அவை புதிய விதிமுறைக்கு இணங்கவில்லை என்றால், ஃபோன்பே மற்றும் கிரெட் போன்ற பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் முறையுடன் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்ட ஃபின்டெக்கள் ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளைச் செயல்படுத்த முடியாது.

புதிய ஒழுங்குமுறைக்கு இணங்கத் தேவையான குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கருத்தில் கொண்டு ஃபின்டெக் துறையானது இக்காலக்கெடுவை 90 நாட்களுக்கு நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நீட்டிப்பு வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கு தங்கள் அமைப்புகளை பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் அமைப்புடன் ஒருங்கிணைத்து ஜூன் 30க்குப் பிறகு தடையற்ற செயல்பாட்டை உறுதிசெய்ய கூடுதல் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
 

கிரெடிட் கார்டுகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட 34 வங்கிகளில் எட்டு வங்கிகள் மட்டுமே பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் முறையில் பில் செலுத்துதம் வசதியைச் செயல்படுத்தியுள்ளன. ஆனால், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் இன்னும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் முறையைச் செயல்படுத்தவில்லை. இது கிரெடிட் கார்டு கட்டணங்களைச் செயல்படுத்துவதற்கு இந்த ஒருங்கிணைப்புகளை நம்பியிருக்கும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

PhonePe மற்றும் Cred போன்ற நிறுவனங்கள் இந்த ஒழுங்குமுறை மூலம் நேரடியாக பாதிக்கப்படும். பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் அமைப்புக்குள் ஜூலை 1 முதல் இணங்காத வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளைச் செயல்படுத்த முடியாது. இந்த பாதிப்பு அவர்களின் பயனர் தளத்தையும் பரிவர்த்தனை அளவையும் பாதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Trending News

Latest News

You May Like