இன்று முதல் வந்தாச்சு புது ரூல்ஸ்..! டிரைவிங் லைசென்ஸ் எடுக்க புதிய விதிமுறை..!

மத்திய அரசு அறிவித்துள்ளபடி இன்று ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 2024 புதிய ஓட்டுநர் உரிமம் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இந்த விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஆமலுக்கு கொண்டு வருகிறது. இந்த விதிமுறையால் ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர கொண்டுவரப்பட உள்ளன. இது படிப்படியாக இந்தியா முழுவதும் அமுலு க்கு வருகிறது.
தற்போது இருப்பதை விட சுலபமாக வழிமுறைகள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு எளிதாக ஓட்டுனர் உரிமம் கிடைக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறையின் கீழ் ஒருவர் தனக்கு வாகன போட்டிக்கான ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்றால் அவர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேவையே இல்லை.
அதற்கு பதிலாக அரசு நேரடியாக ஓட்டுநர் பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கு உரிமத்தை வழங்குகிறது. இதனால் ஓட்டுனர் பயிற்சி வழங்கும் நிறுவனங்களே இனி நேரடியாக ஓட்டுநர் உரிமத்தையும் விண்ணப்பித்து வாங்கி கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு விதமான டிரைவிங் லைசென்ஸ்கள் உள்ளன.
அதில் அதிகமாக பிரைவேட் கார்கள் மற்றும் டூவீலர்களுக்கான ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதுபோக கமர்சியல் வாகனங்களுக்கான தனி லைசென்ஸ் இருக்கிறது. சர்வதேச ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் லைசென்ஸ் என்று தனியாக இருக்கிறது. இந்த மூன்று வகையான டிரைவிங் லைசென்ஸ்கள் தற்போது வழங்கப்படுகின்றன.
முதல் கட்டமாக ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்கும் முன்னர் பயிற்சி உரிமம் வழங்கப்படும் இப்படி பயிற்சி உரிமம் 6 மாதங்களுக்கு செல்லும்படியாகும். இந்த காலத்தில் அந்த ஓட்டுனர் சரியாக வாகனம் ஓட்டி படித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அவருக்கு சோதனை செய்யப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இப்படியாக வழங்கப்படும் மோட்டார் வாகன இன்சூரன்ஸ் என்பது கியருடன் கூடிய இலகு ரக மோட்டார் வாகனங்களுக்கான இன்சூரன்ஸாக இருக்கும்.
இந்த ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்த நபராக இருந்தால் போதும் அவர் மனநிலையிலும் உடல் நிலையிலும் வாகனம் ஓட்ட தகுதியானவராகவும் இருக்க வேண்டும். அடுத்ததாக கமர்சியல் வாகனங்களை பொருத்தவரை மூன்று விதமான பிரிவுகளில் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. ஹெவி, மீடியம், மற்றும் லைட் மோட்டார் வாகனங்களுக்காக தனித்தனி லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஓட்டுனர் உரிமத்தை பெற குறைந்தபட்சம் பள்ளியில் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது 18 பூர்த்தியாகி இருக்க வேண்டும். இப்படியாக வழங்கப்படும் லைசென்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். ஏற்கனவே தனி நபர் லைசென்ஸ் ஒருவர் வைத்திருந்தாலும், அவர் கமர்சியல் வாகனத்தை ஓட்ட தனி லைசென்ஸ் வாங்க வேண்டும்.
அடுத்ததாக சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பொறுத்தவரை வெளிநாடுகளுக்கு சென்று வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸாக இருக்கிறது. இதன் மூலம் இந்திய சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை ஏற்கும் நாடுகளில் இந்த லைசென்சை வைத்து வாகனம் ஓட்ட முடியும். இந்த லைசென்ஸ் ஒரு ஆண்டுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த லைசென்ஸ் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாகவே லைசென்ஸ் எடுக்க வேண்டும். இந்தியாவில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றமான விஷயமாகும்.
ஜூன் 1 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடுமையான அபராதமாக சிறுவர் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவர்களுக்கு ரூ.25000 அபராதம் விதிக்கப்படும். இதுமட்டுமின்றி, வாகன உரிமையாளரின் பதிவு அட்டை ரத்து செய்யப்படும், மேலும், சிறுவர் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறமாட்டார்.