1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் புது ரூல்ஸ் வருது.. என்னனு பாருங்க..!

1

ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம்!

100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் விற்றுமுதல் கொண்ட வணிகங்கள் 30 நாட்களுக்குள் இ-சலான் போர்ட்டலில் ஜிஎஸ்டி சலான் பதிவேற்றம் செய்ய வேண்டும். நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

பரிவர்த்தனைக் கட்டணம்!

நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து ஈக்விட்டி டெரிவேடிவ் பிரிவில் பரிவர்த்தனை கட்டணத்தை அதிகரிக்கப் போவதாக மும்பை பங்குச் சந்தை (BSE) அக்டோபர் 20ஆம் தேதியன்று தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

KYC கட்டாயம்!

நவம்பர் 1 முதல், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனைத்து காப்பீடுதாரர்களும் KYC செய்துகொள்வதை கட்டாயமாக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் உரிமைகோரலில் (Claim) நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை
மேலும், நவம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமைகள், தீபாவளி உள்ளிட்ட பிற பண்டிகைகள் மற்றும் விருப்ப விடுமுறைகள் ஆகியவை மாதத்தின் மொத்த நாட்களில் பாதிக்கும் மேலானவை. எனவே எந்த முக்கிய வேலைக்கும் வங்கிகளுக்கு செல்ல விரும்பாதவர்கள் வங்கிகள் திறந்திருக்கும் நாட்களை அறிந்து கொள்வது நல்லது. பிராந்தியத்தைப் பொறுத்து, நாட்டின் அந்தந்த மாநிலங்களில் விடுமுறைகள் வேறுபடுகின்றன.

லேப்டாப் இறக்குமதி கட்டுப்பாடு: 

ஹெச்எஸ்என் 8741 பிரிவின் கீழ் வரும் லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் (பிசிக்கள்) மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அக்டோபர் 30 வரை அரசு தளர்வு அளித்துள்ளது. நவம்பர் 1 முதல் என்ன நடக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. நவம்பர் 1 முதல் இறக்குமதி கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News

Latest News

You May Like