1. Home
  2. தமிழ்நாடு

இனி மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு..!

1

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் அடிப்படையில் மருந்து கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆல்கஹாலின் மூலப் பொருட்களாக இருக்கும் மருந்து பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சானிடைசர் வாங்க செல்வோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமாக சானிடைசர் வாங்குபவர்களின் அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், விதி மீறி தனி நபர்களுக்கு அதிக அளவு சானிடைசர் விற்கும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like