1. Home
  2. தமிழ்நாடு

புதிய கட்டுப்பாடு : இனி விடுதி மாணவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது...!

1

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர்கள் இருவரையும் அச்சுறுத்தியதாகவும் பின்னர் அதே நபர்கள் தன்னுடைய நண்பரை தாக்கிவிட்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் உரிய வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் , அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்வது என பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிரகாஷ் தலைமையில் வளாக முதல்வர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனையின்படி அண்ணா பல்கலைக்கழக உள் வளாக குழுவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிண்டிப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கே.எஸ். ஈஸ்வரகுமார், கல்வியியல் புலக்குழுவின் இயக்குனர் குமரேசன், மாணவர்கள் விவகாரங்கள் மையத்தின் இயக்குநர் பாஸ்கரன், கிண்டி பொறியியல் கல்லூரியின் பாலியல் வன்கொடுமை புகார் மையத்தின் இயக்குனர் பிரேமலதா, கோட்டூர்புரம் காவல்நிலையத்தின் அதிகாரி ஒருவர் ஆகியோரைக் கொண்டதாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

பலைக்கழைகத்தின் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை முழுவதும் இயங்குகிறதா என்று சரிபார்க்கவும், இயங்காத நிலையில் உள்ளவற்றை பழுது நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல பலகலைக்கழக மாணவர் விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள் மாலை 6. 30 மணிக்கு மேல் வெளியில் செல்ல அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்து வர வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ,மாணவிகள் இடையே கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like