ஏடிஎம்-இல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு!!

ஏடிஎம்-இல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு!!

ஏடிஎம்-இல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு!!
X

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது நிறைய மோசடிகள் நடைபெறுவதால் பாதுகாப்பு வழிமுறையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கொண்டுவந்துள்ளது.

ஏடிஎம்களில் 10,000 ரூபாய்க்கு மேல் எடுத்தால் ஓடிபி நம்பரைப் பதிவிட வேண்டியிருக்கும். ஏடிஎம் மெஷினில் நீங்கள் எவ்வளவு எடுக்க வேண்டும் என்று பதிவிட்டவுடன் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி நம்பர் அனுப்பப்படும்.

sbi 1

அதை நீங்கள் ஏடிஎம் ஸ்கிரீனில் பதிவிட வேண்டும். அதன் பின்னரே பணத்தை எடுக்க முடியும். ஏடிஎம் தொடர்பான மற்றுமொரு விதிமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதற்கான அனுமதியை மத்திய ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வழங்கியிருந்த நிலையில், 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சுமையை ஏற்படுத்துவதாக உள்ளது.

எனினும், ஏடிஎம் பராமரிப்பு செலவுகள் போன்றவை அதிகமாக இருப்பதால் வேறு வழியில்லாமலேயே வங்கிகள் தங்களது பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

newstm.in

Next Story
Share it