மாஸ்க் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை.. மாநகராட்சி அதிரடி !

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவியிருந்தப்போதும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதன் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகம் பேர் இப்போதும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி வரும் வரை முகக் கவசம் தான் கொரோனா தடுப்பு மருந்தாக கருதப்படுகிறது. எனவே மும்பையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் பலர் முகக்கவசம் அணியாமல் செல்வதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இ
தனை தடுக்கும் வகையில் மும்பையில் முககவசம் அணியாதவர்களை சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
முககவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலித்து வருகிறோம். இதில் அபராதம் செலுத்த மறுப்பவர்கள் மற்றும் ஊழியர்களிடம் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களை சாலையை சுத்தம் செய்தல் போன்ற சமூக பணிகளில் ஈடுபட வைக்கிறோம் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
newstm.in