1. Home
  2. தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு புதிய நெறிமுறை.. வெளியானது அறிவிப்பு..!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு புதிய நெறிமுறை.. வெளியானது அறிவிப்பு..!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும், தேர்வின்போது தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால், அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.

எந்த ஒரு தேர்வரும் முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்கு பின்னர் தேர்வு கூடத்திற்குள் நுழையவோ 1.15மணிக்கு முன்னர் தேர்வுக் கூடத்தில் இருந்து வெளியேறவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு கூடம் அமைந்துள்ள இடத்தை எளிதில் தெரிந்துகொள்ளும் பொருட்டு, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் விரைவு தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு அறைக்குள் அலைபேசி மற்றும் வேறு ஏதேனும் மின்னணு உபகரணங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே விண்ணப்பதாரர்கள் உடமைகளை தேர்வு மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும்.

இருந்தாலும், சொந்த உடமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது தேர்வரின் சொந்த பொறுப்பிற்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like