‘கங்குவா’ படத்தின் புது போஸ்டர் வெளியீடு..!

நடிகர் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்திலிருந்து புது போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக இருக்கிறது. பேண்டஸி ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தில் திஷா பதானி, ஜெகபதிபாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர் உறுதி செய்துள்ளது.இப்போஸ்டரில் படம் இந்த ஆண்டு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.