1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி உதயம் ?

Q

தமிழக மீனவர்களும் தங்களுக்காக புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறது அரசியல் பரப்பாகி இருக்கிறது. சென்னை காசிமேடு பகுதியில் நேற்று மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு மீனவ சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் ரவி, ”மீனவர்கள் நலன்களை காக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி துவங்க இருக்கிறோம்.

திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள 610 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து ஒற்றை தலைமையின் கீழ் கட்சி உருவாக்கப்படும். எனக் கூறிய அவர், இதற்காக சட்ட வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக மீனவர்களை காக்க அதிமுக, திமுக கட்சிகள் உதவவில்லை என குற்றம்சாட்டினார்.

நாங்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம். அதற்குள் தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு செய்யப்பட்டு, விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி கட்சிப் பெயர், சின்னத்தை அறிவிப்போம்.

எப்படியும் சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். 100 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுப்போம். கட்சி துவக்க பணிக்காக அனைத்து மாவட்டங்களிலும் திண்ணைப் பிரச்சாரம் செய்யும் பணிகளையும் தொடங்கி இருக்கிறோம் ” என்றார்.

Trending News

Latest News

You May Like