1. Home
  2. தமிழ்நாடு

வெறும் 11 மணி நேரத்தில் புதிய திட்டம் வாபஸ்..! இனி ஒரே நிறம் தான்.. பணிந்தது Zomato நிறுவனம்..!

1

சொமட்டோ இன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) தீபிந்தர் கோயல், முற்றிலும் சைவ உணவு விநியோக சேவையைத் தொடங்குவதாக அறிவித்தார். சுத்த சைவத்தை பின்பற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை மனதில் கொண்டு இந்த சேவையை நிறுவனம் தொடங்கியுள்ளது.

புதிய சேவையைத் தொடங்க சைவ வாடிக்கையாளர்களின் பதில்களை அடிப்படியாகக் கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டதாக கோயம் கூறியுள்ளார். இந்தியாவில் 100 சதவீத சைவ உணவைப் பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் தளம் 'ப்யூர் வெஜ் ஃப்ளீட்' ஐ அறிமுகப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.சைவ உணவுகளை டெலிவரி செய்வதற்கான பச்சை நிற சீருடை மற்றும் பையை அறிமுகப்படுத்தினார்.இந்த உணவுகளை எடுத்துவரும் ஊழியர்கள் பச்சை நிற சீருடையிலும், உணவுப் பொருள்கள் பச்சை நிறப் பெட்டியிலும் எடுத்து வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு விமர்சனம் எழுந்த நிலையில் அந்த நிறுவனத்தின் CEO டிபீஜர் கோயஸ் விளக்கம் அளித்துள்ளார். அதாவது அனைவரும் இனி சிவப்பு நிற சீருடையே  அணிவர். ஆனால் சைவ உணவுகள் தனியாக டெலிவரி செய்யப்படும். டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மக்களின் உணவுத் தேர்வுகளின் அடிப்படையில், நிறத்தால் பிரிவினையை ஏற்படுத்துவதாக இருப்பதாக, பச்சை நிறப் பெட்டியில் சைவ உணவுகள் மட்டும் விநியோகம் செய்யும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட வெறும் 11 மணி நேரத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

மேலும், சில விசேஷ நாள்களில், அசைவம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குடியிருப்பு வளாகம் அல்லது சில சமூக அமைப்புகளில் எதிர்ப்புகள் கிளம்பலாம் என்பதை நாங்கள் இப்போதுதான் உணர்கிறோம். எங்களால் இதுபோன்ற ஒரு பிரச்னை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அறிவித்துள்ளார்கள்.  


 

Trending News

Latest News

You May Like