1. Home
  2. தமிழ்நாடு

புதிய உச்சம்; ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்துக்கு விற்பனை!

Q

சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 21ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,960 ரூபாய்க்கும்; சவரன், 55,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 98 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
* செப்டம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.
* நேற்று(செப்.,23) தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 6,980 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 55,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
* இந்நிலையில், இன்று(செப்.,24) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனைகிறது. ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
* கடந்த மூன்று தினங்களாகச் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,240 உயர்ந்துள்ளது.
* இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலை. வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like