புதிய உச்சம்! 58000- தாண்டியது தங்கம் விலை
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய பட்ஜெட்டின் போது தங்கம் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அன்றாடம் குறைந்து 50 ஆயிரத்தை தொட்டது. ஆனால் அதன் பிறகு அதிகரித்த நிலையில் தற்போது 58 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் இன்று அக்டோபர் 19ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் விலை ரூ 7280 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 58240 க்கு விற்பனையாகிறது.
அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 2 உயர்ந்து ரூ 107 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
.png)