1. Home
  2. தமிழ்நாடு

புதிய ஓடிடி ஆரம்பம் : ஒரு மாதத்திற்கு ரூ.29 மட்டுமே..!

1

‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம் உருவாகியுள்ளது.சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு போட்டியில் கூட இடம் கிடைப்பதில்லை. இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த ஓடிடி தளம். அதே சமயம் இதன் பெயருக்கு ஏற்றபடி தன்னுள் இன்னும் சில ஓடிடி தளங்களை ஒன்றிணைத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் இயக்குநர்களாக எம்.ஆர் சீனிவாசன், சுதாகர் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். இந்த ‘ஓடிடி பிளஸ்’ துவக்க விழாவும் இதில் ஒளிபரப்பாகின்ற ‘ஃபெமினிஸ்ட்’ என்கிற வெப் சீரிஸின் முதல் பாகம் மற்றும் ‘சென்டென்ஸ்’ என்கிற குறும்படம் ஆகியவற்றின் திரையிடலும் நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிள் நடைபெற்றது.மேலும் அடுத்தடுத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’-ல் இடம் பெற இருக்கும் படைப்புகளின் ட்ரெய்லர்களும் திரையிடப்பட்டன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனுராமசாமி கலந்து கொண்டார். 

மேலும் சமீப காலங்களில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி அதே சமயம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படைப்புகளை கொடுத்த இயக்குநர்கள் ஜான் கிளாடி (பைரி), மணிவர்மன் (ஒரு நொடி), ரா.வெங்கட் (கிடா), பாலாஜி வேணுகோபால் (லக்கி மேன்), கண்ணுசாமி ராஜேந்திரன் (வட்டார வழக்கு), யஷ்வந்த் கிஷோர் (கண்ணகி), விக்னேஷ் கார்த்திக் (ஹாட்ஸ்பாட்), சரத் ஜோதி மற்றும் எழுத்தாளர்கள் வசந்த் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஸ்மி (கூஸ் முனுசாமி வீரப்பன் வெப்சீரிஸ்) ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன் இயக்குநர் சீனுராமசாமி கையால் நினைவு பரிசும் புத்தகமும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். 

Trending News

Latest News

You May Like