1. Home
  2. தமிழ்நாடு

புதிய கருத்துக்கணிப்பு : ம.பி.யில் ஆட்சியை பிடிப்பது யார்?

1

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப்போகும் அரசை தேர்வு செய்வதற்கான போட்டிக்களம் அனல் பறந்து வருகிறது. 5 மாநிலங்களுக்கும் இந்த மாதத்தில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மத்தியபிரதேச சட்டசபை தேர்தல், வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

இந்தநிலையில், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும் சிவராஜ்சிங் சவுகானே முதல்வராக வர வேண்டும் என பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். என்டிடிவி, சிஎஸ்டிஎஸ் லோக்நிதி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like