1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய சட்டம் வருகிறது..!

Q

பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

* ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை

* பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டணை.

* மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை

* பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை; ஜாமினில் வெளியே வர முடியாது.

* குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை

* நெருங்கிய உறவினரால், அதிகாரம் மிக்கவரால் பலாத்கார வழக்குகளில் ஆயுளுக்கும் சிறை.

* கூட்டு பலாத்காரம், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தல் போன்றவற்றுக்கும் ஆயுள் சிறை தண்டனை

முதல்வர் தாக்கல் செய்த இந்த மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Trending News

Latest News

You May Like