இன்று புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல்..!

கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் புதிய எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா மக்களவையில் இன்று (13-ந்தேதி) தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 622 பக்கங்களை கொண்டதாக இந்த மசோதா இருக்கும் என்று தெரிகிறது.
புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது பாராளுமன்றத்தின் நிதி நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும். குழு தனது பரிந்துரைகளை வழங்கிய பின்னர், அவற்றில் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பது குறித்து மீண்டும் மந்திரிசபை முடிவு எடுக்கும்.
மொழி எளிமைப்படுத்தல் சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்து கொள்ள எளிதாகவும் மாற்றும் என்றும், இது சர்ச்சைகள், வழக்குகளைக் குறைக்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு அதிக வரி உறுதிப்பாட்டை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த புதிய மசோதா நேரடி வரி சட்டங்களை புரிந்து கொள்வதை எளிதாக்கும். வரிச் சுமையை குறைப்பதுடன், விதிகள் எளிமையான வாக்கியங்களில் இருக்கும்.
1. வருமான வரி சட்டத்தை எளிமையாக்க உள்ளனர். எல்லோரும் புரிந்துகொள்ளும்படி வருமான வரி மாற்றப்படும்.
2. வருமான வரி தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும். புதிய தளம், செயலி உருவாக்கப்படும்.
3. தனி நபர் வருமான வரி மேலும் எளிமையாக்கப்படும்.
4. பிஸ்னஸ் வருமான வரி இப்போது சிக்கலாக உள்ளது. இதை மிக எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி மாற்றுவார்கள்.
5. பழைய வருமான வரி regime நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்கிறார்கள்.
6. இப்போது நடைமுறையில் உள்ளன பழைய வருமான வரி regime, புதிய வருமான வரி regime இரண்டும் வழக்கத்தில் இருக்கும். ஆனால் பழைய முறையில் உள்ள சலுகைகள் நீக்கப்படலாம்.
7. பட்ஜெட்டில்தான் ஸ்லாப் மாற்றப்பட்டது என்பதால் வருமான வரி ஸ்லாப் இந்த சட்டத்தில் மாற்றப்படாது.
8. அதே சமயம் புதிய வருமான வரி regimeல் புதிதாக சலுகைகள் சேர்க்கப்படலாம். அதாவது வீட்டு லோன் சலுகை போன்ற சலுகைகள் சேர்க்கப்படலாம்.
9. நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டிற்கு புதிய வருமான வரி சட்டம் தேவை என்றும், இதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் பிப்ரவரி 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
10. முந்தைய சிக்கலான சட்டத்திற்குப் பதிலாக நாட்டில் புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டு வர சமீபத்தில் ஆய்வுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய வருமான வரி மசோதாவை அரசு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தான் தாக்கல் செய்ய உள்ளனர்.