அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் !! கொரோனா சிகிச்சை சேர்ப்பு !! தமிழக அரசு...

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளதாவது ; ஜூன் 30ம் தேதியுடன் முடிவடையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கால அவகாசம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அடுத்தாண்டு ஜூன் 30 வரை இந்த திட்டப் பலன்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் கொரோனா நோய் சிகிச்சையும் கொண்டு வரப்பட்டுள்ளது.
செயற்கை சுவாச வசதி இன்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.1,500, செயற்கை சுவாச கருவி வசதியுடன் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நபருக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.8500 ரூபாயும் வழங்கப்படும்.
தீவிர கொரோனா தொற்று இல்லாத நிலையில் தனியார் கிரேடு 1 மற்றும் 2 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோருக்கு மருந்து செலவுடன் ஒன்பதாயிரத்து 500 ரூபாயும், கிரேடு 3 முதல் 6 நிலைகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு மருந்து மற்றும் 7 ஆயிரத்து 500 ரூபாய் நாள் ஒன்றுக்கு காப்பீடு திட்டம் மூலம் கிடைக்கும். மேலும் கொரோனா சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் அதிகப்பட்ச வரம்பாக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Newstm.in