கர்நாடகாவில் புதிய தலைவலி..! வேகமாக பரவும் ‘பிங்க் ஐ’ தொற்று..!

கர்நாடக மாநிலத்தில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் பிங்க் ஐ என்கிற தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இது கண் இமைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சவ்வு பகுதி வீக்கமடையும் போது ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் கண்களின் ஓரத்தில் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் தோன்றும். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியது.கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கண் பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, கண் இமை மற்றும் அதனை சுற்றியுள்ள ஜவ்வு வீக்கம் அடைந்து கண் ஓரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றும் முடியாக இருக்கும்.
மேலும், கண்பாதிப்பினால் பாதிக்கப்பட்டோரின் அருகில் இருந்தாலே அந்த பாக்டீரியாவின் மூலமாக மிக விரைவில் தொற்று பரவுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். மேலும், அரசின் தரத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கூடிய விரைவில் கண் பாதிப்பு தொடர்பான சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.