1. Home
  2. தமிழ்நாடு

புதிய வசதி : இனி தானாகவே அடுத்தடுத்த ரீல்ஸ் ஓடும்..!

Q

ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது, ஆட்டோ ரீல்ஸ் என்ற ஆப்ஷன் கொண்டு வரப்பட உள்ளது. இனி பயனர்கள் ரீல்ஸைப் பார்க்க ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அம்சம் சில பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரீல்ஸ் பட்டனை கிளிக் செய்து ஆட்டோ ரீல்ஸ் ஆன் செய்தால் தானாகவே அடுத்தடுத்த ரீல்ஸ்கள் ஓட தொடங்கும். பிற வேலைகளைச் செய்துகொண்டே இன்ஸ்டாகிராம் பார்ப்பவர்களுக்கு இந்த ஆப்ஷன் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது.

தற்போது, இந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டு வருகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும் எனத்தெரிகிறது.

Trending News

Latest News

You May Like