1. Home
  2. தமிழ்நாடு

வரும் 17-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வரும் 17-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!


வரும் 17-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டை, அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை முதல் 19-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 17-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like