1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்..!

1

ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் மாறப்போகும் விதிகள்

காசோலை தொடர்பான விதி: காசோலை தொடர்பான விதியினை பாங்க் ஆப் பரோடா மாற்ற உள்ளது. அதன்படி 5 லட்சம் மற்றும் அதற்கு மேலான காசோலைகள் செலுத்துவதற்கு வங்கியால் நேர்மறை ஊதிய முறை அவசியமாக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறைகள்: ஆகஸ்ட் மாதத்தில் பல பண்டிகைகள் வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் மொத்தம் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சனி, ஞாயிறு போன்ற வழக்கமான விடுமுறைகளும் அடங்கும்.

எல்.பி.ஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் எல்.பி.ஜி சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதமும் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

அபராதம்: வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் இன்னும் 3 நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் மே மாதம் முதல் புதிய அரசு தலைமை ஏற்றுள்ளது. இதனால் அங்கு பல்வேறு புதிய மாற்றங்களும் அமலாகி வருகின்றன. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை முதல் கர்நாடக மாநிலத்தில் 2 புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. கர்நாடக மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் நந்தினி பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் மூன்று உயர உள்ளது. இதனால் நீல நிற பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூபாய் 39 இல் இருந்து 42 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் தயிரின் விலையும் லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டு ரூபாய் 50க்கு விற்பனையாக உள்ளது.

பால் உயர்வுக்கு முன்னதாக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு இறுதி முடிவாக லிட்டருக்கு ரூபாய் மூன்று உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் பெங்களூரு – மைசூர் இடையிலான எக்ஸ்பிரஸ்வே பாதைகளில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மோட்டார் அல்லாத அனைத்து வாகனங்கள், மல்டி ஆக்சில் ஹைட்ராலிக் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டிராக்டர்கள் போன்றவை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் அனைத்தும் முதன்மை சாலையை தவிர்த்து சர்வீஸ் சாலையை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 118 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலையில் அதிவேக வாகனங்கள் செல்லும் போது விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்றும், குறைந்த வேகத்திலான வாகனங்கள் செல்லும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like