ஆகஸ்ட் 1 முதல் யுபிஐயில் புதிய மாற்றங்கள் !

யுபிஐ பண பரிவர்த்தனையில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் வருகிறது. இந்நிலையில் Paytm, PhonePe, Google Pay போன்ற பயன்பாடுகளை பயன்படுத்தி, தினமும் கோடிக்கணக்கான மக்கள் பணம் செலுத்தும் UPI சேவையில், ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வெளியிட்ட அறிவிப்பின் படி, UPI API பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி அதிக அளவில் பயன்படுத்தப்படும் 10 API-களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஒரு பயனர் தனது பணம் இருப்பு விவரங்களை ஒரு நாளில் 50 முறை மட்டுமே பார்க்க முடியும். ஒரு மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை 25 முறைக்கு மேல் சரிபார்க்க அனுமதிக்கப்படாது. இவை அனைத்தும் NPCI-யின் புதிய கட்டுப்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தானியங்கி கட்டணங்களில் SIP, OTT சந்தா கட்டணங்கள் போன்றவை இனி உச்ச பரபரப்பில்லாத நேரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும். அதாவது, காலை 10 மணிக்கு முன் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 9:30 மணிக்குப் பிறகு மட்டுமே இத்தகைய பரிவர்த்தனைகள் நடைபெறும். ஒவ்வொரு நிமிடத்திலும் 4 லட்சம் பேர் UPI மூலமாக பணம் செலுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், சில நிமிடங்கள் கூட UPI செயலிழந்தால், கோடிக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம். இத்தகைய செயல்பாடுகளை தவிர்க்கவே இம்மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.