விருத்தாசலத்தில் புதிய பேருந்து நிலையம்? அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாரதம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 9 ஆம் தேதி, தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மகாவீர் ஜெயந்தி, சனி, ஞாயிறு, தமிழ் புத்தாண்டு என 5 நாட்கள் சட்டசபைக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் 5 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இதில் செய்தி மற்றும் விளம்பரம், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிகை மீதான விவாதத்தில் பங்கேற்று புதிய அறிவிப்புகளை அமைச்சர் சாமிநாதன் வெளியிட உள்ளார்.
இதனிடைய இன்றைய கூட்டத்தொடரில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், விருத்தாசலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கேஎன் நேரு, நிலம் கிடைத்தால் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றார். மேலும் விருத்தாசலம் பேருந்து நிலையத்தை மேம்படுத்த 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்தார்.
தொடர்ந்து செங்கத்தை நகராட்சியாக அறிவித்த நிலையில் சாலைகளை சீரமைத்து கால்வாய் அமைக்கப்படுமா என எம்எல்ஏ கிரி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கேஎன் நேரு, நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்க 3750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்