1. Home
  2. தமிழ்நாடு

அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை..!

1

அயோத்தி ராமர் கோயிலில் கருவறையில் கடவுளுக்கு சேவை செய்யும் அர்ச்சகர்கள், பழம்பெரும் கலாசாரத்தைப் பின்பற்றி இனி மஞ்சள் (பீதாம்பரி) நிற உடையை அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரத்தின் அறக்கட்டளை நிர்வாகம், உடை குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், அர்ச்சகர்கள் இதுவரை அணிந்து வந்த காவி உடை மாற்றப்பட்டு மஞ்சள் நிற உடை அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, காவி நிறத்தில் அர்ச்சகர்கள் சௌபந்தி எனப்படும் மேலாடை, வேட்டி, தலைப்பாகை அணிந்திருந்தனர். தலையில் கட்டப்படும் தலைப்பாகை துணி பருத்தியால் ஆனதாக இருக்கும். அது மட்டுமல்ல, தலைப்பாகையை மிக நேர்த்தியாக கட்டுவதற்கு, அர்ச்சகர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலாடையான சௌபந்தி என்ற குர்த்தி போன்ற உடையில் பொத்தான்களுக்கு பதிலாக கயிறு போன்ற அமைப்பு இருக்கும். வேட்டி, காலின் கணுக்கால் மறைப்பது போல கட்ட வேண்டும். சநாதன தர்த்தைப் பின்பற்றி, ராமர் கோயிலில் உதவி அர்ச்கர்கள் அனைவரும், தலை முதல் கணுக்கால் வரை ஆடை அணிந்திருக்க வேண்டும். இதுவரை சில உதவி அர்ச்சகர்கள் மட்டுமே மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தனர். ஆனால், இனி ஒட்டுமொத்த அர்ச்சகர்கள் குழுவும், பீதாம்பரி நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலின் கருவறைக்குள் இருக்கும்போது, அர்ச்சகர்கள், செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இதுபோன்ற தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட்டதில்லை.

Trending News

Latest News

You May Like