தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!
கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டன. இதன் காரணமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிப்பதற்கு இந்த மழலையர் வகுப்புகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன.
இதற்காக 2,831 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடந்து வந்தன. இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தன. இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர் என தெரிவித்துள்ளார்.