நெட்டிசன்கள் கலாய்..! என்ன அம்பானி வீட்டு திருமணம் பொது நிகழ்ச்சியா ?
நமது நாட்டின் டாப் தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். அவர்களில் இருவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், அடுத்து இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த நிகழ்வையொட்டி மும்பையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பொது நிகழ்ச்சி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை போக்குவரத்து காவல் துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “ஜூலை 5 மற்றும் ஜூலை 12 முதல் 15-ம் தேதி வரை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தகவல்களையும் காவல் துறை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இதில் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தை ‘பொது நிகழ்ச்சி’ என காவல் துறை குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். “பொது நிகழ்ச்சி என்றால், சாதாரண மும்பைவாசி இந்நிகழ்வில் அனுமதிக்கப்படுவாரா?” என பெரும்பாலானோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Due to a public event at the Jio World Convention Centre in Bandra Kurla Complex on July 5th & from July 12th to 15th, 2024, the following traffic arrangements will be in place for the smooth flow of traffic.#MTPTrafficUpdates pic.twitter.com/KeERCC3ikw
— Mumbai Traffic Police (@MTPHereToHelp) July 5, 2024
.png)