1. Home
  2. தமிழ்நாடு

Netflix ஓடிடி சேவையில் மாற்றம்..!

Q

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், டபுள்யூடபிள்யூஇ (WWE) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வேர்ல்ட் விரெஸ்லிங் எண்டர்டெயின்மெண்ட்-க்கான (World Wrestling Entertainment) பிரத்யேக ஸ்ட்ரீமிங் தளம் (Exclusive streaming platform) ஆக நெட்பிளிக்ஸ் மாறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்கீழ் டபுள்யூடபிள்யூ-வின் வாராந்திர முதன்மை நிகழ்ச்சிகளான ரா (Raw), என்எக்ஸ்டி (NXT) மற்றும் ஸ்மாக்டவுன் (SmackDown) ஆகியவைகளுடன் சேர்த்து விரெஸ்மேனியா (WrestleMania), சம்மர்ஸ்லாம் (Summer Slam), ராயல் ரம்பிள் (Royal Rumble) மற்றும் மணி இன் தி பேங்க் (Money in the Bank) உள்ளிட்ட பிரீமியம் நேரடி நிகழ்வுகளையும் நெட்பிளிக்ஸ் வழியாக பார்க்கலாம். இதன்கீழ் லைவ் இந்தி வர்ணனையும் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் லைவ் ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்-க்குள் நெட்பிளிக்ஸ் நிறுவனம் காலடி எடுத்து வைத்து உள்ளது. இந்தியாவில் டபுள்யூடபிள்யூஇ-க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், ரூ.199 முதல் தொடங்கும் நெட்பிளிக்ஸ் சேவையின் கீழ் மேலும் பல புதிய வாடிக்கையாளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like