1. Home
  2. தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயில் யானைக்கு இப்படியொரு திறமையா?

nellaiyappar temple
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருக்கும் பெண் யானை காந்திமதி அழகாக மவுத் ஆர்கன் கருவியை வாசிப்பது பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.

தென்மாவட்டங்களில் இருக்கும் சிவ ஸ்தலங்களில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மிகவும் பழமையானதாகும். உலகளவில் இருந்து பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கின்றனர்.

பக்தர்கள் மத்தியில் நெல்லையப்பர் கோயிலுக்கு எவ்வளவு பிரபலமாக உள்ளதோ, அதே அளவுக்கு அக்கோயிலின் காந்திமதி யானைக்கும் மவுசு உள்ளது. தினமும் யானை காந்திமதியை பார்க்க பக்தர்கள் கூட்டம் கோயிலுக்குள் அலைமோதும்.

தற்போது காந்திமதி யானை மவுத் ஆர்கன் இசைக்கருவியை கற்றுக்கொண்டுள்ளது. பாகன்கள் ராமதாஸ், விஜயகுமாரின் முயற்சியில் மாலை தோறும் யானைக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தனது துதிக்கை மூலம் யானை மவுத் ஆர்கன் வாசித்து கோயிலில் இசை மழை பொழிந்து வருகிறது.

மொத்தம் 4450 கிலோ எடைக் கொண்ட காந்திமதி யானை ஒட்டுமொத்த திருநெல்வேலிக்கும் செல்லப் பிள்ளையாக உள்ளது. தெருக்களில் வீதி உலா வருவது, கோயில் விழாக்களில் அம்பாரி எடுப்பது, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் செல்வது என்று காந்திமதி யானை என்ன செய்தாலும் செய்தி தான்.

எப்போதும் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் காந்திமதி யானைக்கு 3 மணிநேரம் நடைப் பயிற்சி தினசரி வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் நீச்சல் குளத்தில் குளிக்கவும் வைக்கப்பட்டு வருகிறது. உடல் எடை அதிகரிப்பு காரணமாக குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது காந்திமதி யானை 300 கிலோ எடை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Trending News

Latest News

You May Like